யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கவனமின்மையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போதனா வைத்தியசாலையின் எதிரில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய வெளிநோயாளர் பிரிவு வாயிலுக்கு அருகில் ஒன்றுகூடியவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி கோசங்களை எழுப்பினர். பின்னர், வைத்தியசாலை வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
எனினும், பொலிசார் வீதியை மறிக்க வேண்டாமென அறிவுறுத்தியதையடுத்து, வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு இடையூறு இல்லாமல், வைத்தியசாலைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு அனுப்பப் போவதாக குறிப்பிட்டு, பொதுமக்களின் கையெழுத்தும் பெற்றனர்.




