கடந்த வாரம் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ரி20 போட்டி வெற்றியைப் பதிவு செய்த இலங்கை பெண்கள், புதன்கிழமை டெர்பியில் இங்கிலாந்துப் அணியை மீண்டும் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
கப்டன் சாமரி அத்தபத்து பந்துவீச்சில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணியை 116 ரன்களுக்கு ஆட்டமிழக்க உதவினார். பின்னர் விரட்டலில், 28 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.
இலங்கைப் மகளிரணி, இங்கிலாந்து மகளிரணியை எந்தவொரு வடிவத்திலும் ஒரு தொடரில் தோற்கடித்தது இதுவே முதல் தடவையாகும்.
இங்கிலாந்து பெண்கள் 19 ஓவரில் 116 (மையா பௌச்சியர் 23, டேனியல் கிப்சன் 21, எமி ஜோன்ஸ் 20, சாமரி அத்தபத்து 3/21, உதேஷிகா பிரபோதனி 2/16, கவிஷா தில்ஹாரி 2/16)
இலங்கை பெண்கள் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 117 (சாமரி அத்தபத்து 44, ஹர்ஷிதா சமரவிக்ரம 26, அனுஷ்கா சஞ்சீவனி 20, சாரா கிளென் 2/23)