‘இந்தியன் 2’ படத்தில் வில்லன்: உறுதிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா

Date:

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுபற்றி உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுடன் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் அளித்த பேட்டியில் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். இதற்கு முன் ஷங்கரின் ‘நண்பன்’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்