26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
மலையகம்

ஆசிரியர் விடுதிக்குள் 35 அடி ஆழத்தில் குழி

ஆசிரியர் ஒருவரின் விடுதியினுள் 35அடி ஆழத்தில் பாரிய மாணிக்கக்கல் குழி தோண்டப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா, மௌசாகலை நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் விடுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் நால்வரும், திங்கட்கிழமை (4) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விடயம் அம்பலமானது. மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

21 வயது மனைவியின் வாயை வெட்டிய 39 வயது கணவன்!

Pagetamil

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Pagetamil

விபத்தில் இரண்டாகிய தனியார் பேருந்து!

Pagetamil

Leave a Comment