வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்று (5) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை பரப்பு வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
குறித்த பிரதேசம் உயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்து வந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதமளவில் விடுவிக்கப்பட்டிருத்தது.
குலுக்கல் முறையில் காணிகளை தெரிவு செய்து பயனாளர்களுக்கு வழங்கி வைத்த இன்றைய நிகழ்வில் வலி வடக்கு பிரதேச செயலாளர் திரு.சிவஸ்ரீ, அரச அதிகாரிகள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் சாந்தாதேவி,பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1