கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Date:

காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ம் திகதி முறிகண்டிக்கும், இரணைமடு சந்திக்கும் இடையில் ஏ9 வீதியில் இரவு 10.30 மணியலவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பார ஊர்தியுடன் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட மாட்டுக்கு இடம் கொடுத்து செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்
காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (29) அதிகாலை உயிரிலந்துள்ளார்.

உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செனவிரட்ன எனவும் அவர் திருமணமாகி ஒரு வருடகாலமேயாகும்.

இறந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம்...

ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதலின் பின்னணி இதுதான்!

ஈரானில் அமெரிக்கப் படைகளுக்கும், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கடல்வழிப் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக...

தூசணம் கதைத்த சிறுவனின் வாயில் சூடு வைத்த தந்தை

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்