24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

நெடுந்தீவு குதிரைகளுக்கு குடிநீர் வழங்குவதில் நெருக்கடி ஏற்படலாம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் தற்போதைய கடும் வறட்சி காரணமாக அங்குள்ள குதிரைகளுக்கான நீரை வழங்குவதில் நெருக்கடி ஏற்படலாமென சுட்டிக் காட்டிய நெடுந்தீவு பிரதேச செயலாளர் 7 தொட்டிகள் காணப்பட்ட போதும் 2 தொட்டிகளுக்கே நீர் நிரப்பப்படுகின்றது எனவும் இவ் வறட்சி தொடருமானால் இந் நிலமை மோசமடையலாம் எனவும் சுட்டிக் காட்டினார்.

அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக இடம்பெற்ற வரட்சி தொடர்பான கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலுள்ள குதிரைகள் மற்றும் கால்நடைகளுக்கான நீர்வழங்கல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் குறித்த கலந்துரையாடலில் கடற்படையினரின் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் எழுவை தீவு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் நெடுந்தீவு குடிநீர்த் தேவை தொடர்பாக தங்களால் முடிந்த உதவியை செய்வதாகவும் கடற்படையால் குறிப்பிடப்பட்டது.

இதே வேளை நெடுந்தீவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் சுத்திகரிக்கப்பட வேண்டிய கேணிகளை சுத்தப்படுத்தி உதவுமாறு கடற்படையினருக்கு அரசாங்க அதிபர் வேண்டுகோள் முன்வைத்தார்.

இலங்கை இராணுவத்தால் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பாக தேவைப்படும் உதவிகள் தொடர்பாக அரசாங்க அதிபரினால் வேண்டுகோள் விடுக்கப்படும் போது தாம் உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment