இந்தியா-சீனா எல்லையில் உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் அருகே ஒரு பனிப்பாறை இன்று வெடித்ததாக, எல்லை சாலை பணிக்குழுவின் தளபதி கர்னல் மனீஷ் கபிலை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்தவொரு சேதமும் அல்லது உயிர் இழப்பும் குறித்து எந்த அறிக்கையும் இல்லை.
முன்னதாக கடந்த பிப்ரவரியில், உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமாத்தில் ஒரு பனிப்பாறை உடைந்தது. இது தவுலி கங்கா ஆற்றில் பெரும் வெள்ளத்திற்கு வழிவகுத்தது மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான இமயமலையின் மேல் பகுதிகளில் பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்தியது.
பொங்கி எழுந்த நீரோட்டத்தில் மலைப்பகுதிகளில் நீர் விரைந்து சென்றதால் வழியில் இருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்களாக தொடர்ந்த நிலையில் 70’க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டன மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
பின்னர், உத்தரகண்ட் அரசு 136 பேரை இறந்ததாகக் கருதப்படுகிறது என்று அறிவிக்க அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.இந்நிலையில், தற்போது அதே பகுதியில் மற்றுமொரு பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.