நுவரெலியா பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன், கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (17) இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் தரம் 08, 09 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களே இந்த மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மைதானத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1