கர்நாடகா : கொரோனா பரவலை தடுக்க கர்நாடகாவில் சனி மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமுலுக்கு வந்தது.நாடு முழுவதும் கொரோனா கோர தாண்டவத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி சில முக்கிய பிரபலங்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அநத் வகையில் கர்நாடகாவில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதையடுத்து நேற்று இரவே கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடின.
பெங்களூரு, ஹீப்ளி போன்ற நகரங்களில் வாகன போக்குவரத்து முடங்கியது. பொலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அத்தியாவசிய பணிகள் மற்றும அவசர கால தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.