26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
கிழக்கு

யாழ்ப்பாணம் தையிட்டியை போல திருகோணமலையில் தமிழர் பகுதியில் கட்டப்படும் விகாரை: கட்டுமானப்பணிகளை நிறுத்த உத்தரவிட்ட கிழக்கு ஆளுனர்

திருகோணமலை நிலாவெளி வீதியில் பெரியகுளத்தில் அமைக்கப்படும் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளதாக அம்பிட்டிய சீல வம்சதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை நகர மற்றும் கடவத்தை பிரதேச செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக விஹாரதிபதி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கிழக்கு ஆளுநருக்கு தொலைபேசியில் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு பிரதேச செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக விகாராதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் தொலைபேசி அழைப்பின் பிரகாரம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொன்னையா தனேஸ்வரன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுவட்டார மக்களின் கடும் எதிர்ப்பினால்  பொரலுகந்த ரஜமகா விகாரையின் துப்பரவு மற்றும் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவின் நகல்கள் ஆளுநரின் செயலாளர், மாவட்ட செயலாளர், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், நிலாவெளி பொலிஸ் நிலையம், இலுப்பைக்குளம் கிராமசேவகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலாவெளி வீதியில் இலுப்பைக்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் அபிவிருத்திப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

விகாரைக்கு சொந்தமான நிலம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதற்கு பக்கத்து இடத்தில் விகாரையின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. புதிய விகாரை கட்டப்படும் வரும் இடத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இரண்டு சிங்களக் குடும்பங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் தமிழ் மக்களை நான் அடிக்கடி சந்தித்தேன். இங்கு விகாரை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள், வேலை நிறுத்தப்படாவிட்டால் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார்கள். விகாரை கட்டுவதை நான் எதிர்க்கவில்லை. நான் இந்த மாவட்டத்தில் அரசியல்வாதி இல்லை, 99% தமிழ் மக்கள் வாழும் பகுதியில் விகாரை கட்டும் போது எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இப்பகுதி மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.  இந்த விகாரையை நிர்மாணிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறும், ஆர்.சம்பந்தன் மற்றும் கபில நுவன் அத்துகோரல ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தையிட்டியிலும், இவ்வாறே விகாரைக்கு சொந்தமில்லாத இடத்தில் திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டு, சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

புளியம் பொக்கனை பாலத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

east tamil

யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்த கோரி கடும் மழைக்குள்ளும் மக்கள் ஆர்ப்பாட்டம்

east tamil

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய இடைக்கால அரசாங்க அதிபர் நியமனம்

east tamil

காணிகள் கையகப்படுத்தலை எதிர்த்து குச்சவெளி பிரதேசத்தில் மக்கள் போராட்டம்

east tamil

சாமிந்த ஹெட்டியாரச்சி புதிய பதவிக்கு நியமனம்

east tamil

Leave a Comment