மொஸ்கோவை தாக்க முயன்ற 2 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

Date:

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவை நோக்கிச் சென்ற இரண்டு ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் புதன்கிழமை அதிகாலை நகரின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடெடோவோ பகுதியில் ஒரு ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், இரண்டாவது தலைநகரின் மேற்கில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலைப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார்.

“இரண்டு போர் ட்ரோன்கள் நகரத்திற்குள் பறக்க முயற்சித்தது பதிவு செய்யப்பட்டது. இரண்டும் வான் பாதுகாப்பு மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டனர், ”என்று சோபியானின் டெலிகிராம் செய்தி சனலில் குறிப்பிட்டார்.

“தற்போது, இடிபாடுகள் விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை,” என்று அவர் கூறினார்.

மொஸ்கோவைத் தாக்கும் முயற்சியில் உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ரஷ்ய அரசு நடத்தும் TASS செய்தி நிறுவனம் புதன்கிழமை ட்ரோன் தாக்குதல் முயற்சியை அறிவித்தது.

ஒரு வாரத்திற்குள் மொஸ்கோ மீது நடத்தப்பட்ட மூன்றாவது ட்ரோன் தாக்குதல்  முயற்சியாகும்.

ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி, உக்ரேனிய ட்ரோன்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரின் புறநகரில் உள்ள போடோல்ஸ்கி மாவட்டத்திலும், திங்களன்று கலுகா பகுதியிலும் வீழ்த்தப்பட்டன. மாஸ்கோவில் இருந்து தென்மேற்கே 200கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள கலுகாவுக்கு அருகில் ஏழு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் கூறியது.

உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களின் தாக்குதல் இலக்காக மொஸ்கோ சமீபத்தில் மாறியுள்ளது. ஜூலை 30 அன்று, உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy ரஷ்யாவிற்கு “போர்” வரப்போகிறது என்று எச்சரித்தார். எனினும், இதுவரை வெற்றிகரமான தாக்குதல் எதையும் மேற்கொள்ள முடியவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்