இந்தியா- மேற்கிந்தியா கிரிக்கெட் போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்

Date:

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் ‘வலிமை’. இப்படம் படமாக்கப்பட்ட சமயத்தில் படம் தொடர்பாக எந்தவொரு அப்டேட்டும் படக்குழுவினர் கொடுக்கவில்லை என்பதால், இது தொடர்பாகப் பிரபலங்களிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டு வந்தனர் அஜித் ரசிகர்கள்.

இது சமூக வலைதளத்தில் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இதைத் தாண்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள். கடந்த 2021இல் சென்னையில் இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொயின் அலியிடம் வலிமை பட‌ அப்டேட் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதேபோல், இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியின் அஜித்குமாரின்‌ ‘விடாமுயற்சி’ பட‌ அப்டேட் கேட்டு சிறுவன் ஒருவன் பதாகை ஏந்திய காட்சி வைரலாகி வருகிறது.

2 வது இன்னிங்ஸில் இந்தியா முதல் ஓவரில் துடுப்பாட்டம் செய்த போது சிறுவன்‌ தனது கையில் விடாமுயற்சி‌‌ தனது கையில் இருந்த பதாகையை காண்பித்து‌ கேட்டிருந்தார். அது நேரலையில் ஒளிபரப்பானது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஓகஸ்ட் இறுதியில் தொடங்குவதாக கூறப்பட்டது. ஆனால் விசாரித்தபோது செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவித்தனர். இதில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்