40 வயதில் அம்மாவாகும் த்ரிஷா

Date:

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் உட்பட பலர் நடித்த மலையாளப் படம், ‘புரோ டாடி’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

மோகன்லால் – மீனா ஜோடியின் மகன் பிருத்விராஜ். இவர்களின் குடும்ப நண்பர் லாலு அலெக்ஸின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். பிருத்விராஜும் கல்யாணியும் ரகசியமாகக் காதலித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் கல்யாணி தாய்மை அடைகிறார். திருமணத்துக்குப் பெற்றோரிடம் பேச நினைக்கையில், மீனாவும் தாய்மை அடைந்திருக்கிறார். இந்தப் பிரச்சினை என்னவாகிறது என்பதுதான் கதை. இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. சிரஞ்சீவி நடிக்கும் இந்தப் படத்தில் மீனா கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார்.

பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும் கல்யாணி கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். ‘பங்கர்ராஜூ’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார். இதற்கிடையே 39 வயது ஷர்வானந்துக்கு 40 வயது த்ரிஷாவை எப்படி அம்மாவாக நடிக்க வைக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்