82 வயதான மூதாட்டியை மூர்க்கத்தனமாக வன்புணர்வு செய்த 57 வயது மருமகனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் திருமதி காந்திலதா உத்தரவிட்டுள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்த வாகெதெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட குருந்துவத்தை பொலிஸார், வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் மகள் சந்தேக நபரின் இளைய சகோதரனை திருமணம் செய்துள்ளதாக நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வயோதிபப் பெண் தனது திருமணமான மகளுடன் வசிப்பதாகவும், யாரும் இல்லாத நேரத்தில் சந்தேகநபர் வீட்டிற்கு வந்து துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது
தகவல் அறிந்ததும் போலீசில் புகார் செய்யப்பட்டது. சந்தேக நபருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. நோயுற்ற இந்த பெண் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.