மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

Date:

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு இல்லாத நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டம் வாசை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்புத்துறையினர் மூலம் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, வாசையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளில் 13 பேர் தீவிபத்து காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாசை விரார் நகராட்சி ஆணையம் இந்த தகவலை வெளியிட்டதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஒருபுறம் இருக்கையில், இதுபோன்ற அசாம்பாவிதங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்