கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலய நூற்றாண்டு விழா

Date:

மட்டக்களப்பு கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இன்று23/07 பாடசாலை அதிபர் சி. அரசரெட்டிணம் தலைமையில் நடைபெற்றது.

பிரதமஅதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் எ.அரவிந்தகுமார், கெளரவ அதிதிகள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் சிறப்பு அதிதிகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் ஜி.அருணன், கல்குடா வலய கல்வி பணிப்பாளர் ரி.அனந்தரூபன், வாகரை வடக்கு கோட்டகல்வி பணிப்பாளர், பாதுகாப்பு அதிகரிகள்,
ஆசிரியர்கள்,பெற்றேர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அதிதிகள் வரவேற்பு, கொடியேற்றுதல்,மங்கல விளக்கேற்றல், கலை நிகழ்வுகள், நூற்றாண்டு விழா “கதிராழி” சஞ்சிகை வெளியீடு ,சேவை நலன் பாராட்டுக்கள், அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன.

இதன்போது பாடசாலையில் சாதாரண, உயர்தர பரீட்சைகள் மற்றும் 5ம் தர புலமை பரீட்சையிலும் சித்தி அடைந்து சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் நினைவு சின்னங்களும், பதக்கங்களும் பாடசாலை நிருவாக்கத்தினரால் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்

அத்துடன் கல்லூரி தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட உதைபந்து, கரப்பந்து, எல்ல மற்றும் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பதக்கங்களும் வெற்றிக்கிண்ணம் என்பன வழங்கப்பட்டன.

-மு.கோகிலதாசன் –

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்