34 வது வீரமக்கள் தினம்

Date:

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 34 ஆவது வீரமக்கள் தினம் இன்றைய தினம் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவாலயத்தில் இடம்பெற்றது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ஆர்.இராகவன் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கட்சி தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய த.சித்தார்த்தன் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

சம நேரத்தில் உயிரிழந்த தோழர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள், தோழர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்