உங்கள் வீட்டுக்கும் இப்படி நூதன கொள்ளையர்கள் வரலாம்: கேக் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மயக்கம்!

Date:

புத்தளம் நகரிலுள்ள வீடொன்றுக்கு சென்ற மர்ம நபர்கள், வீட்டிலுள்ளவர்களை ஏமாற்றி கேக், பானம் பருகக் கொடுத்து கொள்ளையிட முயன்றுள்ளனர். மர்ம நபர்கள் கொடுத்த கேக்கை சாப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மயங்கி மயக்கமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

65 வயதுடைய நபர், அவரது 63 வயது மனைவி, 29 வயது மகள், குடும்பத் தலைவரின் 86 வயது தந்தை மற்றும் 84 வயதான தாயார் ஆகியோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் அனுராதபுரம் வீதியில் பக்க வீதியொன்றில் அமைந்துள்ள இந்த வீட்டிலேயே மர்ம நபர்கள் கைவரிசை காண்பித்துள்ளனர்.

இவ்வாறு வந்த சந்தேகநபர்கள் இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளான இந்த வீட்டின் உரிமையாளருடன் நட்பாக பேசியுள்ளனர். இருதய சத்திரசிகிச்சைக்குள்ளானவர்களுக்கு நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் 50000 ரூபா வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.

காசோலையை பெறுவதற்கு முன்னர், தாம் கொண்டு வந்த கேக், குளிர்பானங்களை உட்கொண்டு, அதை படம் பிடித்து, உரிய நிதி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென குறிபபிட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதை நம்பிய வீட்டுக்காரர்கள், கேக் சாப்பிட்டு, குளிர்பானம் குடிக்க சம்மதித்தனர்.

ஆனால் தான் ஒரு சிறிய கேக்கை மட்டும் சுவைத்ததாகவும், எதையும் குடிக்கவில்லை என்றும் வீட்டின் உரிமையாளரான இதய நோயாளி கூறுகிறார்.

இதற்கிடையில், இந்த தெரியாத நபர்கள் கொண்டு வந்த கேக் மற்றும் பானங்களை குடித்துவிட்டு, சிறிது நேரத்தில் மனைவி, மகள், தந்தை மற்றும் தாய் மயங்கி விழுந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளர், உடனடியாக புத்தளம் நகரில் வேலை செய்யும் மூத்த மகளுக்கு அழைப்பேற்படுத்தியுள்ளார்.

மகள் அழைப்பை ஏற்ற போது, “மயங்கி விழுந்து விட்டார்கள்” என தந்தை கூறியது மட்டுமே கேட்டுள்ளது. இதை கூறியபடி, தந்தையும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

தந்தைக்கு மீள அழைப்பேற்படுத்தியபோதும், அவர் பதிலளிக்கவில்லை. உடனடியாக வாடகை முச்சக்கர வண்டியில் மகள் வீட்டுக்கு வந்தபோது, இரண்டு அந்நியர்கள் வீட்டைவிட்டு தப்பியோடியதாகவும்  பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகள் சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் திரண்டு, வீட்டிலிருந்தவர்களை புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்