தீவக பாடசாலையில் மாணவி மீது தாக்குதல்: அதிபர் இன்று கைதாவார்!

Date:

தீவக வலயத்தில் பாடசாலை மாணவி தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர் இன்று கைது செய்யப்படுவார் என யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிசார் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதனை தெரிவித்தார்.

கடந்த 13ஆம் திகதி தீவக வலய பாடசாலையொன்றில்9 வயதான பாடசாலை மாணவியொருவர் பாடசாலையில் வைத்து தாக்கி தண்டிக்கப்பட்ட விவகாரம் சில நாட்களின் முன் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு நேற்று (15) முறைப்பாடு கிடைத்ததாகவும், குற்றம்சாட்டப்பட்ட அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவர பொலிஸ் குழு ஒன்று யாழ்ப்பாணம் அனுப்பப்ட்டுள்ளதாகவும், அதிபரை இன்று கைதுசெய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊர்காவற்றுறை பொலிஸாரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினாலும் விசாரணைகள் நாளை ஆரம்பிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்