Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

இப்போதைக்கு உக்ரைனை இணைப்பதில்லை: நேட்டோவின் முடிவால் ஜெலன்ஸ்கி விரக்தி!

நேட்டோ இராணுவக் கூட்டணியில் உக்ரைன் எதிர்காலத்தில் சேர முடியும் என்று கூறியுள்ள நேட்டோ தலைவர்கள், உக்ரைன் உனடியாக நேட்டோவில் இணைவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கடுமையான விரக்தி, கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

31 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் செவ்வாயன்று லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸில் இரண்டு நாள் உச்சிமாநாட்டைத் தொடங்கிய போது, உக்ரைன் விவகாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“உக்ரைனின் எதிர்காலம் நேட்டோவில் உள்ளது” என்று தலைவர்கள் ஒரு பிரகடனத்தில் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் செயல்முறைக்கு எந்த காலக்கெடுவையும் வழங்கவில்லை.

“கூட்டணிகள் ஒப்புக்கொண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்போது கூட்டணியில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கும் நிலையில் நாங்கள் இருப்போம்” என்று நிபந்தனைகளைக் குறிப்பிடாமல் அறிவிப்பு கூறியது.

உக்ரைனை நேட்டோவில் இணைப்பதற்கு உள்ள தடைகளை அகற்ற, உக்ரைன் உறுப்பினர் செயல் திட்டம் என்று அழைக்கப்படும் திட்டத்தை இம்முறை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. வதற்கான ஒரு தேவையை கைவிட்டது.

ஜெலன்ஸ்கி நேட்டோ தலைவர்களை ஒரு ருவிட்டர் பதிவில் விமர்சித்திருந்தார்.

பெப்ரவரி 2022 இல் ரஷ்யா படையெடுப்பை ஆரம்பிப்பதற்கு முன்பே, பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் பிணைக்கப்பட்ட விரைவான நேட்டோ அங்கத்துவத்துக்கு உக்ரைன் அழுத்தம் கொடுத்து வருகிறது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனன் அழைப்பை ஆதரித்தனர், உக்ரைனை நேட்டோவின் பாதுகாப்பு குடையின் கீழ் கொண்டு வருவதே ரஷ்யாவை மீண்டும் தாக்குவதைத் தடுக்க சிறந்த வழி என்று வாதிட்டனர்.

அமெரிக்கா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் நேட்டோவை ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு இழுத்துவிடக்கூடும் என்று அஞ்சும் எந்த நடவடிக்கையிலும் எச்சரிக்கையாக இருந்தன.

நேட்டோவில் தற்போது 31 நாடுகள் அங்கம் வகிக்கும் நிலையில், உக்ரைன் விவகாரத்தில் அந்த நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படாமல் போயுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜர்பைஜான் பயணிகள் விபத்துக்கு ரஷ்ய ஏவுகணை காரணமா?

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment