25.8 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

நிர்வாண வீடியோ பகிடிவதை விவகாரத்தில் கிடுக்குப்பிடி விசாரணை: பேராதனை பல்கலையில் மட்டக்களப்பு மாணவன் தற்கொலை முயற்சி!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

25 வயதான இந்த மாணவன் மட்டக்களப்பை சேர்ந்தவர்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, புதுமுக மாணவர்களை ஆபாசமான காட்சிகளுடன் கூடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து, அவர்களை துன்புறுத்திய சம்பவத்தில் சந்தேக நபராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வந்த மாணவனே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக மாணவனை கடந்த 7ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக சேனக பிபிலே விடுதியில் தங்கியிருந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருடன் அறையில் தங்கியிருந்த மற்ற மாணவர் ஜூலை 7 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் உணவு எடுத்து வர அறையை விட்டு வெளியே சென்றார். திரும்பி வந்தபோது தனது நண்பர் அறையின் கதவைத் திறக்கவில்லை என்றும் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, நண்பன் தரையில் கிடப்பதைக் கண்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறினார்.

சக மாணவர் குழுவின் உதவியுடன் அவர் அறைக்குள் நுழைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார்.

தற்கொலைக்கு முயன்ற மாணவன் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தம்மைத் தாக்கி கையடக்கத் தொலைபேசியைக் கைப்பற்றியதாகவும், தனது கல்வியை நிறுத்தப் போவதாக மிரட்டியதாகவும் தற்கொலைக்கு முயன்ற மாணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

புதிய மாணவர்களின் நிர்வாண புகைப்படங்கள் எடுத்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பல தடவைகள் இந்த மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கேட்டபோது, எல்லா சந்தர்ப்பங்களிலும் தொலைபேசியைக் கொடுக்க மறுத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 7ஆம் திகதியும் அவர் உண்மையான தொலைபேசியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கவில்லை எனவும்,  தொலைபேசியை மறைத்து வைத்தால் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்படுவார் என விசாரணையாளர்கள் மாணவனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தம்மை காலால் மிதித்து தாக்கியதாக மாணவர் குற்றஞ்சாட்டுவதால், அவரை நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவனின் வாக்குமூலம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என பேராதனை பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் மூலம் புதிய மாணவர்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தனர். இதற்கு மாணவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், இந்த மாணவன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததற்கும், மாணவர் சங்க போராட்டங்கள் ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளமைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இரண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் குறித்து வெளியான மதிப்பீட்டு தகவல்

east tamil

சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

east tamil

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பலின்மை – ஆளுநர் நா. வேதநாயகம்

east tamil

Leave a Comment