ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், அவரது 12 வயது மகன் ஆகியோர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதி மற்றும் அவரது மகன் மீது மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆன்டிஜன் பரிசோதனையால் இது உறுதிப்படுத்தப்பட்டதாக டிக்கோயா நகரசபை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
ஹட்டனில் வசிக்கும் தாதி சிங்கள புத்தாண்டு பருவத்தில் காலிக்கு சென்று வந்துள்ளார்.
பண்டிகை காலத்திற்குப் பிறகு கடமைக்காக நேற்று டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு வந்தார்.
அவரது மகன் ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கிறார்.
அவரது வகுப்பில் மாணவர்கள் மற்றும் அவரது நண்பர்கள், கற்பித்த ஆசிரியர்கள் என 66 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1