உலகக்கோப்பை தகுதிச்சுற்று கிண்ணத்தை இலங்கை வெற்றிகொண்டது. இன்றைய இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 128 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை.
சிம்பாவேயின் ஹராரே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற நெதர்லாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது.
இலங்கையின் தொடக்க வீரர் திமுத் கருணாரத் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
பதும் நிசங்கவுடன் தொடக்க வீரராக சதீர சமரவிக்ரம களமிறங்கினார். தொடக்க ஜோடி சோபிக்கவில்லை. சதீர சமரவிக்ரக 19 ஓட்டங்களுடனும், நிசங்க 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்.
குசல் மெண்டிஸ் 43, சஹன் ஆராச்சிகே 57 ஒட்டங்களை பெற்றனர். தனது 2வது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடிய ஆராச்சிகே கன்னி அரைச்சதத்தை அடித்தார்.
சரித் அசலங்க 36, வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களை பெற்றனர். ஏனையவர்கள் சோபிக்கவில்லை.
இலங்கை 47.5 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலக்கை விரட்டிய நெதர்லாந்து 23.3 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. மேக்ஸ் ஓ’டவுட் 33 ஓட்டங்களை பெற்றார்.
மகேஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், தில்ஷான் மதுஷங்க 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் தில்ஷான் மதுஷங்க.
தகுதிச்சுற்று ஆட்டங்களின் தொடர் நாயகன் சிம்பாவேயின் சீன் வில்லியம்ஸ். அவர் 600 ஓட்டங்களையும், 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.