யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயரபுலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணியொன்றிலிருந்து இன்று (4) இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
கட்டுமான பணிக்காக நிலத்தை அகழ்ந்த போது, ரி56 ரக துப்பாக்கிகள் 4, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட ரி 56 துப்பாக்கிக்குரிய மகசீன்கள் 9, தோட்டாக்கள் 18 என்பன மீட்கப்பட்டன.
இந்த ஆயுதங்கள் நீண்காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டுள்ளன. துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன.




