‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா…’: வடிவேலு குரலில் ஈர்க்கும் மாமன்னன் மேக்கிங் வீடியோ

Date:

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படம் வியாழக்கிழமை (29) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

கறுப்பு வெள்ளையில் இருக்கும் இந்த வீடியோவின் பின்னணியில் மெலிசான வடிவேலுவின் குரல் மட்டும் பாடலாக ஒலிக்கிறது. ‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா…’ என்ற எவர்கிரீன் ஹிட் பாடலை எந்த இசைக் கலப்பும் இல்லாமல் அவர் பாடும்போது படப்பிடிப்பு தளக் காட்சிகள் வந்து செல்கின்றன. ஒருவித மென்சோகம் கலந்த வடிவேலுவின் குரலில் முன்நகரும் காட்சிகள் ஈர்க்கின்றன. இந்த வீடியோ படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்கள் அணியிடம் இஸ்ரேல் சபாநாயகர் பதவி

இஸ்ரேலிய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமையன்று புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நபர்...

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு

சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்ற குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல்...

இராஜங்கன சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கன சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்