கைலாசாவிற்குள் நுழைய முடியாது: இந்தியர்களிற்கு தடைவிதித்த நித்தி!

Date:

இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார் நித்தியானந்தா.

நித்தியானந்தா மீது பாலியல் புகார், ஆள் கடத்தல் என்று ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாருக்கு தண்ணீ காட்டி வரும் நித்தி, கைலாசாவிற்கு என்று தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார்.

மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபடுகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செய்து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்பத்தி வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் திருப்பதி எழுமலையான் வேடத்தில், புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். அதன் சூடு தனிவதற்குள் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்தி.

நித்தி பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில், கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பிரதம நீதியரசரின் கணவர் கைது!

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின்...

உருத்திரபுரம் யுவதி மரணம்: நீதி விசாரணைகோரி போராட்டம்!

கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி: MOH அலுவலகம் அவசர எச்சரிக்கை

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி: MOH அலுவலகம் அவசர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்