கிழக்கு கல்வியற்கல்லூரி ஆசிரியர்கள் கிழக்கிலேயே நியமிக்கப்படுவர்!

Date:

கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் இன்றைய சந்திப்பின் போது உறுதியளித்தார்.

கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளுக்கான நியமனம் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வழங்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்த ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சுற்றாடல் அமைச்சர் இஸட்.ஏ. நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், எஸ்.எம்.எம். முஷாரப், இசாக் ரஹ்மான் ஆகியோர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இன்று (05) கல்வியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை கிழக்கிலேயே பணிக்கமர்த்த நியமனம் வழங்க வேண்டும் என்றும், கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இடம்பெறவுள்ள அநீதி தொடர்பிலும், கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடம் தொடர்பிலும், கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அழுத்தமாக கோரிக்கையை முன்வைத்த எம்.பிக்கள் குழு துரித கதியில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

இவற்றெல்லாம் கேட்டறிந்த அமைச்சர் ஏற்கனவே நியமன கடிதங்கள் சகல மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் மாகாண ஆளுநர்களிடம் கடிதங்களை மீளப்பெறல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாவும் நாளை மாலை முதற்கட்டமாக ஊவா மாகாண ஆளுநரை அழைத்து பேச உள்ளதாகவும் கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கு தனது பூரண ஆதரவை எப்போதும் வழங்க தயாராக உள்ளதாகவும், கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் எம்.பி க்களிடம் தெரிவித்தார் என இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்