நானாட்டானில் கத்திமுனையில் வைத்தியரிடம் திருட்டு!

Date:

மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின் தனியார் சிகிச்சை நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுமார் 5.இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9.மணியின் பின் கிளினிக் வளாகத்தினுள் நுழைந்த இரண்டு பேர் சிங்களத்திலும் தமிழிலும் பேசிக் கொண்டு குறித்த வைத்தியரிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.

கத்திமுனையில் சுமார் 5.இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகை போன்றவற்றை அபகரித்துள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் வைத்தியரின் மூக்குக் கண்ணாடி உடைந்ததில் வைத்தியருக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நேற்று (8) காலை பாதிக்கப்பட்ட வைத்தியர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை நானாட்டான் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பல திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

குறித்த வைத்தியர் நீண்ட காலம் வைத்தியராக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்