பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, இலங்கைப் பெண் ஒருவரின் சந்தேக மரணம் தொடர்பாக அண்மையில் குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணை செய்த போது, அமைச்சர் என்ற அடையாளத்தை நிறுவுவதில் சிரமப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் குவைத்துக்கான தூதுவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
கீதா குமாரசிங்க என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, தூதுவர் கீதா யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
“கீதா குமாரசிங்க என்றால் உடரட மெனிகே பாடல்கள் பாடியtரா?” என்று தூதுவர் கேள்வி எழுப்பினார், அதற்கு இராஜாங்க அமைச்சர் அவர் ஒரு நடிகை என்று பதிலளித்தார்.
“நான் பாடல்கள் பாடியதில்லை. பல வருடங்களாக நான் சினிமாவில் இருந்தேன். இப்போது நான் … பெண்கள் மற்றும் குழந்தைகளில் பணிபுரிகிறேன்…” என்றார்.
பின்னர், குவைத் குடியிருப்பில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக கேட்டறிந்தார்.
அவரது மரணம் தற்கொலை அல்ல என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த விளக்கம் கோரப்பட்டது.