24.7 C
Jaffna
January 29, 2025
Pagetamil
சினிமா

பாயல் நீண்டநாள் மனதிலிருப்பார்!

‘RX 100’ படத்தை இயக்கியதின் மூலம் டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் இயக்குநர் அஜய் பூபதி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘செவ்வாய்கிழமை. இந்த திரைப்படத்தின் போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘RX 100’ படத்தின் மூலம் புகழ் பெற்றவருமான பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இணைந்துள்ள அஜய் பூபதி, இப்போது தனது புதிய படத்தில் இருந்து ‘ஷைலஜா’ என அவரது கதாபாத்திரத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் கதாநாயகியின் தோரணையும் அவளது கண்களில் நிலவும் கசப்பான உணர்ச்சியும், விரலில் இருக்கும் பட்டாம்பூச்சியும் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் உடன் இணைந்து இயக்குநர் அஜயும் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.

படத்தின் சுவாரஸ்யமான முதல் பார்வை குறித்து இயக்குநர்- தயாரிப்பாளர் அஜய் பூபதி பேசியதாவது, “ செவ்வாய்கிழமை’ திரைப்படம் 90களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்.

இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது” என்றார். தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் ஆகியோர் பேசுகையில், ‘RX 100’ படத்தின் சிந்து போல, அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ ஷைலஜாவும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment