25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

எக்ஸ் பிரஸ் பேர்ள் விவகாரத்தில் இலஞ்சம் கொடுக்கப்பட்டதா?

2021 இல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய X-Press Pearl கப்பல் விபத்தை தொடர்ந்து சுற்றாடல் தொடர்பான இழப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் ஊடகங்களும் வெளியிட்ட தகவல்களை விசாரணை செய்யுமாறு கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த முறைப்பாடு நேற்று (18) காலை சமர்ப்பிக்கப்பட்டதுடன், நீதியமைச்சர் இந்தப் பிரச்சினை தொடர்பாக தமக்குக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அசேல ரேகவ தெரிவித்தார்.

கப்பல் தொடர்பான விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளை தாமதப்படுத்துவதற்கு யாரேனும் செல்வாக்கு செலுத்தியிருந்தால் அது இந்த நாட்டுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும் என றேகவ தெரிவித்துள்ளார்.

“யாராவது இதுபோன்ற செயலைச் செய்திருந்தால், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம், என்றார்.

“இந்த வழக்கை நாங்கள் சட்டமா அதிபருடன் விவாதித்தோம். வழக்கை நடத்துவது தொடர்பாக அவர்களுக்கு நாங்கள் வழங்கக்கூடிய முழு ஆதரவையும் வழங்குவோம். அந்த வழக்கு தொடரும் வரை காத்திருக்கிறோம்.

கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சில தற்காலிக கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது. அவர்கள் மீது முழு நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியையும் சந்தித்தோம். அனைத்து தூதரகங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை வரவழைத்து இது குறித்து அவர்களுக்கு தெரிவிக்க அவர் ஒப்புக்கொண்டார்,” என்று அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் அரசியலை ஒழிக்க உறுதி – ஜனாதிபதி

east tamil

மருந்து உற்பத்தி விரைவில் அதிகரிக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

Leave a Comment