சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த குக்கூ..குக்கூ என்னும் அல்பம் பாடல் உலகளவில் பிரபலமாகியுள்ளமை தெரிந்த விடயமே. இந்த பாடலை பல்வேறுபட்ட கலைஞர்கள் தங்கள் கற்பனைகளுக்கு எட்டியவாறு பல்வேறு விதமாக மாற்றி அமைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்திலையில் இலங்கையிலும் குக்கூ பாடலை தங்கள் கற்பனை நிலைகளில் நின்று பல கலைஞர்கள் மீள் பதிப்பாக்கி உள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் இளம் கலைஞர் டிரோசன் அலகரட்ணம் இயக்கத்தில் ஒர்ஜினல் பாடலை அப்படியே பிரதி பண்ணும் வகையில் அல்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கலைஞர்களாலும் முடியும் என்று எண்ணும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கிறது. ஒருத்தரின் கற்பனையை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளும் பொழுது அவரின் நுட்பங்களை கைப்பற்ற முடியாதல்லவா. எனினும் கிட்டத்தட்ட அதற்கு ஒத்ததாக இந்த அல்பத்தை அமைத்திருப்பதன் மூலம் தம் கலைத்திறனை வெளிக்காட்டியிருப்பதோடு, இலங்கையின் கலை முன்னோடிகளாக தம்மை வெளிக்கொண்டு வந்திருக்கம் இளம் குழுவினரை ஊக்கப்படு்தலாம்.
அவர்களின் வீடியோவை கீழ் உள்ள லிங் ஊடாக பார்வையிடுங்கள்.