புத்தாண்டுக்காக உறவினர் வீட்டுக்கு பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுகுருந்த பகுதியில் தீக்கிரையாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அகலவத்தைக்குச் சென்ற ராகம பகுதியை சேர்ந்த சிலர் முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்த போது களுத்துறை கட்டுகுருந்த சந்தியில் முச்சக்கரவண்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததையடுத்து களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்படுத்திய போதிலும் வாகனம் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




