26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
சினிமா

‘மலையாள சினிமாவில் நடித்தால் தேர்ந்த நடிகைதான்’: ராய் லட்சுமி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் ராய் லட்சுமி. கிளாமர் வேடங்களில் நடித்து வரும் அவர், இப்போது மலையாளத்தில் உருவாகும் ‘டிஎன்ஏ’ என்ற படத்தில், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தை டி.எஸ் சுரேஷ்பாபு இயக்குகிறார். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இதில், அஸ்கர் நாயகனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதில், அதிக மேக்கப் இல்லாமல் நடிக்கும் ராய் லட்சுமி, போலீஸ் அதிகாரிக்கான உடல் மொழியை கொண்டு வர அதிகப் பயிற்சி மேற்கொள்கிறார்.

இதுபற்றி ராய் லட்சுமி கூறும்போது, “தென்னிந்திய படங்களில் நான் ஏற்கெனவே முத்திரைப் பதித்திருக்கிறேன். மலையாள சினிமாவில் நடித்தால், நீங்கள் தேர்ந்த நடிகர் என்று பொதுவாகக் கூறுவது உண்டு. அதற்கு காரணம் அந்தப் படங்களின் கதை. இப்போது 2 வருடத்துக்குப் பிறகு அங்கு நடிக்கிறேன். போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடிப்பது சவாலான ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment