வவுனியாவில் நாளை தமிழ் தரப்புக்கள் சந்திப்பு!

Date:

தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகளும், மத மற்றும் சிவில் அமைப்பினரும் தீர்மானித்திருந்தனர்.

இதற்கான முதலாவது கலந்துரையாடல் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதன்போது மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைத்து போராட்டங்களை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, முதலாவது கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது.

காலை 10.30 மணியளவில் வாடிவீட்டு விருந்தினர் விடுதியில் 7 தமிழ் அரசியல் கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புக்களும் கலந்து கொள்ளும்  கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்