இலங்கை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இவ்வாறு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவு பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளை மீறவில்லை என சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், உயர் நீதிமன்றம் ஒரு சுயாதீனமான நிறுவனம் மற்றும் நீதித்துறை உத்தரவுகளை வேறு எந்த நபர்களுக்கும் அல்லது நிறுவனங்களுக்கும் விளக்குவதற்கு அழைக்கப்படக்கூடாது.
நீதித்துறை செயல்பாட்டில் எந்தவொரு தலையீடும் ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது, இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.