உடையார்கட்டில் தந்தை செல்வாவின் 125வது பிறந்ததின நிகழ்வு!

Date:

தந்தை செல்வாவின் 125வது பிறந்த தினம் இன்று (31) மாலை 4மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற பிறந்ததின விழாவில் மங்கள விளக்கேற்றி தமிழர்களின் விடுதலைக்காக பாடுபட்டு வீரகாவியமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், மாவீரர்கள், மற்றும் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து மாணவர்களால் பாடப்பட்டது.

பிரதம விருந்தினராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, கௌரவ விருந்தினர்களாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகன், உடையார்கட்டு புனித யூதா ததேயு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் மற்றும் கூட்டணியின் முக்கியஸ்தர்களான சி.கனகராசா/அருமை ,பா.நிதர்சன்,சூ.இராஜேஸ்குமார் இன்னும் பல முக்கியஸ்தர்களும் சுமார் 350க்கு மேற்பட்ட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் தந்தை செல்வநாயகத்தின் பிறப்பு பொதுவாழ்வை தமிழ் மக்களுக்காக அவர் அர்ப்பணித்த புனிதத்துவம் எனும் தலைப்பில் சிறப்புரைகளை விருந்தினர்களான வீ.ஆனந்த சங்கரி மற்றும் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஈழத்து கவிக்குயில் வி.அபிவர்மா மற்றும் கூட்டணியின் முக்கியஸ்தர் அருமை மாமா எனப்படும் கனகராசா ஐயாவும் தந்தை செல்வநாயகத்தின் சரித்திர முக்கியத்துவம் தொடர்பாக கவிதை வடித்தனர்..

தந்தை செல்வநாயகம் ஐயாவின் 125வது பிறந்தநாள் நிறைவு தின நிகழ்வுகளுக்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட அமெரிக்க நாடுகளுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் றோய் சமாதானம் அவர்களே செய்திருந்தார்.

தொடர்ந்து பல மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி   மற்றும் நிகழ்வின் தலைவர் ஆறுமுகம் ஜோன்சன் அவர்களாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்