மட்டக்களப்பில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம்

Date:

ஏறாவூர் நகரின் புன்னைக்குடா வீதியிலுள்ள பல சரக்குக் கடையொன்றின் களுஞ்சியப் பகுதி இன்று (30) வியாழக்கிழமை பகல் வேளையில் திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தக் கடையிலும் அயலிலுள்ள கடைகளிலும் வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது.

பலத்த வெடிச் சத்தங்களுடன் தீ பற்றியெரிந்தது.

வெடிச் சத்தங்களுடன் கரும்புகை வெளிக்கிளம்ப அந்தப் பல சரக்குக் கடைத் தொகுதியின் மேல் மாடியில் வசித்த பெண்ணும் சிறுவர்களும் கூக்குரலிட்டு உடனடியாக முன் பகுதிக்கு ஓடி வந்தபோது உதவிக்கு விரைந்தோரால் அவர்கள் ஏணி வைத்து இறக்கிக் காப்பாற்றப்பட்டனர்.

அந்தக் கடைத் தொகுதியில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற பொழுது வெல்டிங் செய்த தீப்பொறிகள் பட்டாசுகளில் பட்டு, உடனடியாகவே பட்டசுகள் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தீ கடையிலும் அயல் பகுதி கடைகள், வீடுகளில் மேலும் பரவாமல் உதவிக்கு விரைந்தோரால் தீ அணைக்கப்பட்டு விட்டது.

இந்தச் சம்பவத்தில் கடையிலிருந்த சுமார் 10 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பால்மா, அரிசி, சோடா உள்ளிட்ட இன்னும் பல பொருட்கள் தீயில் கருகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்