தமது ஆண்குறிகளை பெரிதாக்கவும், அதிக நேரம் உடலுறவில் ஈடுபடவும் விரும்பிய இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் பரஸ்பரம் ஊசி மருந்து செலுத்திக் கொண்ட இரண்டு இளைஞர்கள், வீங்கிய ஆண்குறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு இளைஞர்களும் பெரிய ஆண்குறிகளை பெறுவது எப்படியென யூடியூபில் தேடுதல் நடத்தியுள்ளனர். அதில், போலிக்குறிப்புக்களை பார்த்து தமக்கு தாமே சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
ஹீமாடோமா கிரீமை ஊசி மூலம் ஒருவருக்கொருவர் செலுத்தி பரிசோதனை செய்தனர்.
இரவில் மருந்து செலுத்தினர். மருநாள் காலையில் ஆண் குறிகள் வீங்கமடைந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்றனர்.
ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட பயங்கரமான படங்கள் அவற்றின் வீக்கத்தின் அளவைக் காட்டின.
கிரீம் ஆண்குறியில் உள்ள நிணநீர் நாளங்களை சேதப்படுத்தி, வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீக்கம் தானாகவே குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருவருக்கும் ஓய்வெடுக்கவும் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் கூறப்பட்டது.
குடிபோதையில் பரிசோதனையின் விளைவாக ஆண்கள் தங்கள் ஆண்குறியை நிரந்தரமாக சேதப்படுத்தியிருக்க கூடும் என ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவமனையின் தோல் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஓய்வெடுக்கும்படி கூறி வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்ட இளைஞர்கள் இருவரும் மீளவும் வைத்தியசாலைக்கு திரும்பவில்லை..
இணையத்தில் பார்த்து இது போன்ற விபரீதங்களில் ஈடுபடுவது, வலி, புண்கள், குடலிறக்கம் மற்றும் விறைப்புத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.