உத்தரபிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு: முக கவசம் இல்லாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்!!

Date:

லக்னோ

உத்தரபிரதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுகிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் 2வது முறையாக பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.யில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. வியாழக்கிழமையன்று ஒரே நாளில் 104 பேர் இறந்தனர். 22,439 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மே மாதம் 15-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்றும் 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் முதல்முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் 2-வது முறையாக பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்