ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மதிப்பீடு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு!

Date:

மனித உரிமைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பான இறுதி அறிக்கையை பூர்த்தி செய்வதற்காகவே ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல தடவைகள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் பிற குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முந்தைய ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் கண்டுபிடிப்புகள் குறித்து விசாரணை, மற்றும் அறிக்கை அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஜனவரி 21 ஆம் திகதி ஆணைக்குழுவை நியமித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் கமிஷன் தலைவராக உள்ளார்.

ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது, இரண்டாவது அறிக்கை 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்