தடைசெய்யப்பட்ட அமைப்பினரை கைது செய்ய நடவடிக்கை!

Date:

தடைசெய்யப்பட்ட 11 தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை நேற்று முன்தினம்  (14) முதல் கடுமையாக்க பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் கடல் வழியாக தப்பிப்பதைத் தடுக்க பாதுகாப்பை கடுமையாக்க கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உளவுத்துறை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குள் உள்ள முக்கிய நபர்கள், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர்களை கைது செய்ய சிஐடி மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதே நேரத்தில், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களை அடையாளம் காண விமான நிலையத்தில் உளவுத்துறை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்களை மோசடி செய்து நாட்டை விட்டு வெளியேறும் நபர்களை அடையாளம் காண நேற்று (15) சிறப்பு முறைகள் அமுலாகியுள்ளன. கைது செய்யப்படுபவர்கள் குற்றச்சாட்டுகளைப் பொறுத்து சட்ட நடவடிக்கை அல்லது மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உட்பட்டவர்களை புனர்வாழ்வு செய்வதற்காக வவுனியாவில் ஏற்கனவே ஒரு புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பதினொரு அமைப்புகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பாக ஏப்ரல் 13 ம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிவிசேட அரசிதழ் அறிவிப்பில் கையெழுத்திட்டார்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்