Pagetamil
விளையாட்டு

கிளிநொச்சியில் விடுமுறைகால இலசவ நீச்சல் பயிற்சி முகாம்

கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கத்தால் நடாத்தப்பட்ட விடுமுறைகால
இலவச 5 நாள் நீச்சல் பயிற்சி முகாம் சிறப்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை
நிறைவு பெற்றது,

கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் அனுசரணையில் கிளிநொச்சி,யாழ்
மாவட்டங்களைச் சேர்ந்த 22 பாடசாலைகளிலிருந்தும், சில முன்
பள்ளிகளிலிருந்தும் 180 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ் இலவச நீச்சல்
பயிற்சி முகாமில் பங்கு கொண்டிருந்தனர்.

பயிற்சி வகுப்பினை பகீரதன் சிறப்பாக நெறிப்படுத்தியிருந்தார்.பயிற்சி
வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர்,

நிறைவு நாள் நிகழ்வில் 800 இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை
குறித்த செயற்பாடுகளில் மாணவர்களும்,பெற்றோர்களும்,சமூகத்தவர்களும்
கொண்டிருந்த ஆர்வத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சி நிறைவு நாள் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக ஏற்கனவே பயிற்சிகளை
பூர்த்தி செய்த மாணவர்களிடையே நீச்சல் போட்டி ஆண்,பெண்
போட்டியாளர்களிடையே 14,16,18 வயதுப் பிரிவினரிடையே நடாத்தப்பட்டது, பால்
ரீதியாக திறமையாளர்கள் மூவருக்கு காவேரிக் கலா மன்றத்தின் வெள்ளி விழாவை
முன்னிட்டு சிறப்பு விருதும் 10,000/-,5000/-,2500/- பணப் பரிசிலும்
வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்,

பயிற்சி நிறைவு நாளில் காவேரிக் கலா மன்ற நிறைவேற்று இயக்குனரும்
கிளிநொச்சி நகர றோட்டறி கழக தலைவருமான Rtn.(Rev)ஜோசுவா அவர்கள் முதன்மை
விருந்தினராக கலந்து சிறப்பித்தார், வலயக்கல்விப் பணிப்பாளர்,உடற் கல்வி
உதவிக் கல்விப் பணிப்பாளர்,கணக்காளர் லுரேந்திரன் மற்றும் ஓய்வு நிலை
பிரதிக் கல்விப் பணிப்பாளர் Rtn.ம.பத்மநாதன்,விளையாட்டு அபிவிருத்தி
உத்தியோகத்தரும் அமைச்சின் இணைப்பாளரும் பயிற்றுநருமான திரு.அனுராகாந்தன்
மற்றும் றோட்டறி கழக உறுப்பினர்கள், நீர்விளையாட்டுச் சங்க உறுப்பினர்கள்
கலந்து சிறப்பித்தனர்,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

Leave a Comment