இளையராஜா இசையில் பாடிய தனுஷ்: ‘விடுதலை’ சிங்கிள்

Date:

வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். கடந்த ஆண்டு ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்தது. ‘விடுதலை’ முதல் பாகத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இளையராஜா இசையில் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘உன்னோட நடந்தா’ என தொடங்கும் அந்தப்பாடல் வரும் பெப்ரவரி 8ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்