சுவிஸ் கார் விபத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்: இருவர் பலி!

Date:

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர். அதே குடும்பதை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.

கடந்த 21ஆம் திகதி இரவு மெர்சிடிஸ் ரக கார் ஒன்று, பேடன் மேற்கு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குடிபோதை அல்லது போதைப் பொருளினால் ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் குடும்பமொன்றே விபத்தில் சிக்கியது.
St.Gallen கான்டனில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த 18 வயதான மகன் உயிரிழந்தார். தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அந்த காரில் பயணித்த மற்றும் இரண்டு மகள்களும், தாயாரும் சிறிய பாதிப்படைந்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்