27.4 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

‘மாம்பழத்தை தவிர வேறு வருமானமில்லை’: மைத்திரி பஞ்சப்பாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு ரூ.100 மில்லியன் இழப்பீடு வழங்குவதற்காக பிரதேச மக்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நிதி சேகரிக்க நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இவ்வளவு பாரிய தொகையை இழப்பீடாக செலுத்தும் திறன் தன்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

“இவ்வளவு தொகையை செலுத்துவதற்கு என்னிடம் பண பலம் இல்லாததால் மக்களிடம் இருந்து 100 மில்லியன் ரூபாவை வசூலிப்பேன் என நம்புகின்றேன். என்னிடம் சொந்தமாக மோட்டார் சைக்கிள் கூட இல்லை. நிதி திரட்ட குழுவொன்றை அமைப்பேன். நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும்,” என்று அவர் கூறினார்.

அவரது சகோதரரான கோடீஸ்வர வர்த்தகரான டட்லி சிறிசேனவிடம் ஏன் உதவி கோர முடியவில்லை என வினவிய போது, தாங்கள் சகோதரர்கள் என்றாலும் டட்லி சிறிசேனவின் வியாபாரத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

“எங்கள் குடும்பத்தில் 11 பேர் இருக்கிறோம். என் தந்தைக்கு ஐந்து ஏக்கர் நெல் வயல்களும் மூன்று ஏக்கர் நிலமும் இருந்தது. ஐந்து ஏக்கர் நிலம் எனது சகோதரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். எனக்கு மாம்பழத்தைத் தவிர வேறு வருமானம் இல்லை,”  என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கரையொதுங்கிய மியன்மார் நாட்டு படகு

east tamil

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க புதிய தலைவர், செயலாளர் தெரிவு!

east tamil

விமானத்தில் பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து உணர்ச்சி கொண்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி!

Pagetamil

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் 37 வருட சிறை!

Pagetamil

நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது!

Pagetamil

Leave a Comment