கடைத்தொகுதியின் முன் சடலம் (PHOTOS)

Date:

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் பிரதான வீதிற்கு அருகில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை(13) இரவு இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை மீட்டனர்.

சுமார் 65 முதல் 70 வரையிலான வயது மதிக்கத்தக்க ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டது. அவர் கொலைசெய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமடைந்தாா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தனியார் கடைதொகுதியானது தனியார் வங்கியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுடன் மரணமடைந்தவர் காவலாளியாக நியமிக்கப்பட்டவர் எனவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய குறித்த சடலம் தொடர்பில் ஆராய்ந்து உண்மை நிலையை கண்டறிய குறித்த வங்கி நிருவாகத்தின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...

குற்றவாளிகளுடன் இணைந்து சரக்கடித்த மட்டக்களப்பு பொலிஸ்காரரின் நிலை!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்