24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

தமிழாராய்ச்சி படுகொலை அஞ்சலியிலும் ஏட்டிக்குப் போட்டி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென்றும், காலை 10 மணிக்கு நினைவேந்தல் நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், காலை 9.30 மணியளவில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தது.

இதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழரசு மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆனாலும் ஏனைய கட்சிகளின் ஒரு சில உறுப்பினர்களும் அதேநேரத்தில் மறவன்புலவு சச்சிதானந்தமும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தி்டமிட்டபடி தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் பிரதான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் ரெலோ அமைப்பை சேர்ந்த கோப்பாய் தவிசாளர் நிரோஷ், புளொட் அமைப்பை சேர்ந்த சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர், ரெலோவின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உள்ளிட்டவர்களுடன் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment