25.9 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

பருத்தித்துறை நகரசபையில் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சமத்துவக்கட்சி கூட்டணி ஆட்சி மலர்ந்தது!

பருத்தித்துறை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சமத்துவக்கட்சி என்பன இணைந்து ஆட்சியமைத்துள்ளன.

இன்று நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவில் கூட்டமைப்பு- ஈ.பி.டி.பி- சமத்துவக்கட்சி வேட்பாளர் 8 வாக்குக்களையும், எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் 6 வாக்குகளையும் பெற்றனர்.

2023ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பருத்தித்துறை தவிசாளர் பதவிவிலகியதை தொடர்ந்து உருவான தவிசாளர் வெற்றிடத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேலுப்பிள்ளை நவரட்ணராஜா போட்டியிட்டார். அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி, சமத்துவக்கட்சி, தமிழர் விடுதலை கூட்டணியின் தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியத்தை முன்னணியின் 6 உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

ஈ.பி.டி.பியின் ஒரு உறுப்பினர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு

east tamil

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது

east tamil

நாட்டில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் எதிர்பார்ப்பு

east tamil

Leave a Comment